Admission Brochure  Enquiry Now
| Moments of 2024 Booklet | Alumni Testimonials | >Souvenir

தன் சிரிப்புடன் கலந்த பாட்டால் சிகரம் தொட்ட சாதனையாளர்!

பரமக்குடியில் பிறந்து அப்பாவின் வேலை காரணமாக தேவகோட்டைக்கு போனோம் . அங்க தான் நான் ஸ்கூல் எல்லாம் படிச்சேன் சின்ன வயசுலேயே பாடனும், அதுவும் ஸ்டேஜ்ல பாடனும் ஆசை, அதுவும் அம்மாவை பாக்குறப்போ இந்த மாதிரி பாடணும்னு ஆசை.

ஸ்கூல்ல நிறைய பாடி இருக்கேன் அதுவும் சினிமா பாடல் தான். என்கிட்ட பாடற திறமை இருக்குன்னு புரிஞ்சுகிட்ட என் தாத்தா ஒரு பட்டிமன்றத்திற்கு கூட்டிட்டு போனாரு, அங்கதான் எனக்கு முதல் முதல்ல பாட வாய்ப்பு கெடச்சுச்சு, அங்க தான் எனக்கு பயிற்சி கொடுத்து ஒரு முழுமையான பாடகியாக உருவாக்குனாங்க. நான் இப்போ எஸ்.என்.எஸ் காலேஜ்ல கார்டியோ டெக்னாலஜி பண்ணிட்டு இருக்கேன். சினிமா பாட்டு, கானா பாட்டுனு எது பாடினாலும் என்னோட குரலுக்கு நாட்டுப்புற பாடல் தான் பொருத்தமா இருந்தது, அதுவும் நான் சிரிச்சிட்டே பாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைச்சது.

 "என்ன குறை சொன்னவர்கள் எல்லாம் பாட்டு மூலமா பதில் கொடுத்து இருக்கேன்". இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் என் குடும்பம் மற்றும் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் தான். இன்னும் நிறைய சாதிக்கணும், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்ற பெரிய பெரிய இசை அமைப்பாளர்கள் கூட இசையில பாடனும், இதுதான் என் வாழ்நாள் ஆசை. "நமக்கு இருக்கிற திறமையை நம்பினால் நிச்சயமா ஜெயிக்க முடியும்" இது தான் என் தாரக மந்திரம்.